மான்செஸ்டர் மற்றும் ஆம்ஸ்டர்டாமுக்கு இண்டிகோ நேரடி விமான சேவை

March 7, 2025

இங்கிலாந்தின் மான்செஸ்டர் மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கு நேரடி நீண்ட தூர விமான சேவையை தொடங்கவுள்ளது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனம் இண்டிகோ, ஜூலை மாதம் முதல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கு நேரடி நீண்ட தூர விமான சேவையை தொடங்கவுள்ளது. நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து போயிங் 787-9 விமானத்தை குத்தகைக்கு எடுத்துள்ள இண்டிகோ, இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் மூன்று விமானங்களை பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. ஏர்பஸ் A321 XLR […]

இங்கிலாந்தின் மான்செஸ்டர் மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கு நேரடி நீண்ட தூர விமான சேவையை தொடங்கவுள்ளது.

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனம் இண்டிகோ, ஜூலை மாதம் முதல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கு நேரடி நீண்ட தூர விமான சேவையை தொடங்கவுள்ளது. நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்து போயிங் 787-9 விமானத்தை குத்தகைக்கு எடுத்துள்ள இண்டிகோ, இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் மூன்று விமானங்களை பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. ஏர்பஸ் A321 XLR விமானங்கள் இந்த ஆண்டு, A350-900 விமானங்கள் 2027ஆம் ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எந்த நகரங்களில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2030க்குள் இந்தியாவை உலகளாவிய விமான போக்குவரத்து மையமாக மாற்றும் நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu