795 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய இண்டிகோ பங்குகளை விற்கும் ராகேஷ் கங்குவால்

March 11, 2024

இண்டிகோ நிறுவனத்தின் இணை தோற்றுநர் ராகேஷ் கங்குவால், பிளாக் டீல் மூலம் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். இண்டிகோ விமான நிறுவனத்தில் தன்னிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், ராகேஷ் கங்குவால் 795 மில்லியன் டாலர்கள் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக மதிப்புடைய பிளாக் டீல் விற்பனையாக இது இருக்கும் என கருதப்படுகிறது. இந்த விற்பனையில், 22.5 மில்லியன் இண்டிகோ பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு பங்கு […]

இண்டிகோ நிறுவனத்தின் இணை தோற்றுநர் ராகேஷ் கங்குவால், பிளாக் டீல் மூலம் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இண்டிகோ விமான நிறுவனத்தில் தன்னிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், ராகேஷ் கங்குவால் 795 மில்லியன் டாலர்கள் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக மதிப்புடைய பிளாக் டீல் விற்பனையாக இது இருக்கும் என கருதப்படுகிறது. இந்த விற்பனையில், 22.5 மில்லியன் இண்டிகோ பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு பங்கு 2925 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இன்றைய காலை நேர வர்த்தகத்தில், இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 3% வரை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu