குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் - இண்டிகோ, கோ பர்ஸ்ட் அறிவிப்பு

February 24, 2023

விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பல, சலுகை முறையில் பயணச்சீட்டுகளை விற்பனை செய்வதுண்டு. வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்குமான விளம்பர உத்தியாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இண்டிகோ மற்றும் கோ பர்ஸ்ட் ஆகிய விமான நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்தில் குறைந்த விலை டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளன. கோ பர்ஸ்ட் விமான நிறுவனம், பிப்ரவரி 21 முதல் 24 ஆம் தேதி வரையில் குறைந்த விலை டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. மார்ச் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் […]

விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பல, சலுகை முறையில் பயணச்சீட்டுகளை விற்பனை செய்வதுண்டு. வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்குமான விளம்பர உத்தியாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இண்டிகோ மற்றும் கோ பர்ஸ்ட் ஆகிய விமான நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்தில் குறைந்த விலை டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளன.

கோ பர்ஸ்ட் விமான நிறுவனம், பிப்ரவரி 21 முதல் 24 ஆம் தேதி வரையில் குறைந்த விலை டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. மார்ச் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான பயணத்திற்கு இந்த டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதன்படி, உள்நாட்டு விமான பயணத்திற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை 1199 ஆக சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், சர்வதேச பயணங்களுக்கான டிக்கெட் விலை 6139 ரூபாயிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சலுகை வேறு சலுகைகளுடன் இணைக்கப்பட மாட்டாது எனவும், குரூப் புக்கிங் முறைக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம், கடந்த வாரம் குறைந்த விலை டிக்கெட் விற்பனையை தொடங்கியது. இண்டிகோ நிறுவனத்தின் குறைந்த விலை டிக்கெட்டுகள், பிப்ரவரி 25ஆம் தேதி வரை விற்கப்படவுள்ளது. வரும் மார்ச் 13-ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணங்களுக்கான டிக்கெட் விலை 2093 ரூபாய் முதல் தொடங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu