இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, எரிபொருளுக்கான கூடுதல் கட்டணங்களை அறிவித்துள்ளது.
விமான பயண கட்டணங்களில் 300 முதல் 1000 ரூபாய் வரை எரிபொருளுக்கான கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என இண்டிகோ தெரிவித்துள்ளது. விமானங்களை இயக்குவதற்கான எரிபொருளின் விலையில் கடும் உயர்வு காணப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய, கட்டணங்களை உயர்த்துவதாக விளக்கமளித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் விமான பயணச்சீட்டுகளுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது. விமான எரிபொருளுக்கான கட்டணம் மொத்த விமான பயண கட்டணத்தில் 40% ஆக இருக்கும் படி விலை உயர்வு அமல் செய்யப்படும் என இண்டிகோ தெரிவித்துள்ளது.