இண்டிகோ வரலாற்றில் உச்சபட்ச காலாண்டு லாபம்

August 3, 2023

சாதகமான சந்தை போக்கு மற்றும் அதிகரித்த விமான சேவை காரணமாக, இண்டிகோ விமான நிறுவனம் உச்சபட்ச காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இண்டிகோ நிறுவனத்தின் நிகர லாபம் 3090.6 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச காலாண்டு லாபம் ஆகும். அதே வேளையில், நிறுவனத்தின் தாய் நிறுவனமும் 17160.9 கோடி ரூபாய் அளவில், உச்சபட்ச காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது. இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள […]

சாதகமான சந்தை போக்கு மற்றும் அதிகரித்த விமான சேவை காரணமாக, இண்டிகோ விமான நிறுவனம் உச்சபட்ச காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இண்டிகோ நிறுவனத்தின் நிகர லாபம் 3090.6 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச காலாண்டு லாபம் ஆகும். அதே வேளையில், நிறுவனத்தின் தாய் நிறுவனமும் 17160.9 கோடி ரூபாய் அளவில், உச்சபட்ச காலாண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையின் படி, நிறுவனத்தின் வருவாய் 13018.8 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த விமான எண்ணிக்கை 316 ஆக சொல்லப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் சாதகமான காலாண்டு அறிக்கை குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu