இண்டிகோ வருவாய் 76% உயர்வு - ஊழியர்களுக்கு 3% போனஸ் அறிவிப்பு

இண்டிகோ விமான நிறுவனம் தனது நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வருவாய் 77% உயர்ந்து, 141.6 பில்லியன் ரூபாய் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் மொத்தமாக, 37.5 மில்லியன் பயணிகளை இண்டிகோ விமான நிறுவனம் கையாண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 52% உயர்வாகும். மேலும், இண்டிகோ நிறுவனத்தின் லாபம் 919 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இண்டிகோன நிறுவனம், அதிக லாபம் ஈட்டி உள்ளதால் தனது […]

இண்டிகோ விமான நிறுவனம் தனது நான்காம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வருவாய் 77% உயர்ந்து, 141.6 பில்லியன் ரூபாய் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் மொத்தமாக, 37.5 மில்லியன் பயணிகளை இண்டிகோ விமான நிறுவனம் கையாண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 52% உயர்வாகும். மேலும், இண்டிகோ நிறுவனத்தின் லாபம் 919 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இண்டிகோன நிறுவனம், அதிக லாபம் ஈட்டி உள்ளதால் தனது பணியாளர்களுக்கு 3% சம்பளத்தை போனஸ் ஆக வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் நிதி ஆண்டு முதல், இண்டிகோ நிறுவனத்தில் போனஸ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இண்டிகோ நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைமை அதிகாரி சுக்சித் பஸ்ரிச்சா இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu