இந்தோனேசியா: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கால் நீக்க அறுவை சிகிச்சை செய்ததற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

September 9, 2022

இந்தோனேசியாவில் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மூலம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கால் நீக்க அறுவை சிகிச்சை செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இந்தோனேசியாவின் லியாங் டெபோ என்ற குகையில் இருந்து,31000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இது,போர்னியோ தீவைச் சேர்ந்த இளைஞருடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்த எலும்புக்கூட்டின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கால்கள் நீக்கப்பட்ட அந்த இளைஞர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், பல ஆண்டுகள் உயிருடன் […]

இந்தோனேசியாவில் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மூலம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கால் நீக்க அறுவை சிகிச்சை செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

இந்தோனேசியாவின் லியாங் டெபோ என்ற குகையில் இருந்து,31000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இது,போர்னியோ தீவைச் சேர்ந்த இளைஞருடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்த எலும்புக்கூட்டின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கால்கள் நீக்கப்பட்ட அந்த இளைஞர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், பல ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் ஆய்வில் தெரிய வந்துள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை நன்கு வளர்ச்சி அடைந்துள்ள தற்காலத்திலேயே, மிகவும் கடினமான அறுவை சிகிச்சையாகக் கருதப்படும் உறுப்பு நீக்கம், 31000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி சாத்தியமாயிற்று என்று ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

முன்னதாக, பிரான்ஸ் நாட்டில், 7,000 ஆண்டுகள் பழமையான எலும்புக் கூட்டில், உறுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான சான்று கிடைத்தது. அதன் பின்னர், தற்போதைய சான்று, அறிவியல் உலகில் கவனம் ஈர்த்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu