இந்தோனேசியாவில் மெராபி எரிமலை சீற்றம்

March 11, 2023

இந்தோனேசியாவில் உள்ள மெராபி எரிமலை இப்பொழுதும் உயிரோட்டமாகவே காணப்படுகிறது. இந்நிலையில், தற்போது சீற்றமடைந்துள்ள இந்த எரிமலை, கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் உயரத்திற்கு புகையை வெளியேற்றி வருகிறது. உள்ளூர் அதிகாரிகள் தகவல் படி, மதியம் 12 மணியளவில் இந்த எரிமலை வெடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் வெளியேறிய லாவா குழம்புகள் 1.5 கிலோமீட்டர் வரை இருந்ததாக சொல்லப்படுகிறது. எரிமலையின் சீற்றம் இன்னும் தணியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் […]

இந்தோனேசியாவில் உள்ள மெராபி எரிமலை இப்பொழுதும் உயிரோட்டமாகவே காணப்படுகிறது. இந்நிலையில், தற்போது சீற்றமடைந்துள்ள இந்த எரிமலை, கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் உயரத்திற்கு புகையை வெளியேற்றி வருகிறது.

உள்ளூர் அதிகாரிகள் தகவல் படி, மதியம் 12 மணியளவில் இந்த எரிமலை வெடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் வெளியேறிய லாவா குழம்புகள் 1.5 கிலோமீட்டர் வரை இருந்ததாக சொல்லப்படுகிறது. எரிமலையின் சீற்றம் இன்னும் தணியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 2963 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை சீற்றமடைந்துள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த எரிமலை, இதற்கு முன்னதாக 2010 ஆம் ஆண்டு வெடித்தது. அப்போது, 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu