இந்தோனேசியா நாட்டில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இலவச நுழைவு விசா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படுவதாக அந்நாட்டின் சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலவச நுழைவு விசா வழங்குவதன் மூலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என இந்தோனேசியா தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு நுகர்வு ஆகியவை அதிகரிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஏற்கனவே விசா விலக்கு அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளைத் தவிர, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென்கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளுக்கு இலவச நுழைவு விசா அறிவிக்கப்பட்டுள்ளது.