நீட் தேர்வில் பங்கேற்க உள்ள முதல் திருநங்கை இந்திரஜா

தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் எழுதிய முதற்கட்ட திருநங்கை என்ற பெருமையை இந்திரஜா பெற்றுள்ளார். நாடுமுழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு, இந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான ஒழுங்குகளை தேசிய தேர்வு முகமை முழுமையாக செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் இத்தேர்வு மொத்தம் 14 மையங்களில் நடக்க உள்ளது. சாய்பாபா காலனியை சேர்ந்த 22 வயதுடைய திருநங்கை இந்திரஜா உள்ளிட்ட 6,994 தேர்வர்கள் […]

தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் எழுதிய முதற்கட்ட திருநங்கை என்ற பெருமையை இந்திரஜா பெற்றுள்ளார்.

நாடுமுழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு, இந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான ஒழுங்குகளை தேசிய தேர்வு முகமை முழுமையாக செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் இத்தேர்வு மொத்தம் 14 மையங்களில் நடக்க உள்ளது. சாய்பாபா காலனியை சேர்ந்த 22 வயதுடைய திருநங்கை இந்திரஜா உள்ளிட்ட 6,994 தேர்வர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் எழுதிய முதற்கட்ட திருநங்கை என்ற பெருமையை இந்திரஜா பெற்றுள்ளார். மருத்துவப் பயிலும் கனவை வளர்த்துவந்த இந்திரஜா, “நான் 2020-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்தேன். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தேன். ஆனால் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு மீண்டும் தேர்வை எழுதுகிறேன். 1.1 சதவிகித இடஒதுக்கீட்டு வாய்ப்பு எனக்கு உள்ளது. அதனால் இந்த முறையில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேருவேன் என்று நம்புகிறேன். கோவையில் தடாகம் சாலை அரசு பொறியியல் கல்லூரியில் எனது தேர்வு மையம் அமைந்துள்ளது. இந்தத் தேர்வுக்காக முழுமையாக தயார் நிலையில் இருக்கிறேன். எனது பெற்றோர் தொடர்ந்த உற்சாகமும் ஊக்கமும் அளிக்கின்றனர்,” என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu