இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் நிறுவனம், டெல்லி என்சிஆர் பகுதியில், இன்று முதல், வாகனங்களுக்கான எரிவாயு விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
நேற்று, 78.61 ரூபாயாக இருந்த ஒரு கிலோ எரிவாயு, இன்று முதல் 79.56 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 7ம் தேதிக்கு பிறகு, தற்போது 15வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொள்முதல் விலை அதிகமாக உள்ளதால், விலைகள் உயர்த்தப்படுவதாக ஐஜிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி என்சிஆர் பகுதியில், சிஎன்ஜி விலை உயர்த்தப்பட்ட நிலையில், கான்பூர், பதேபூர், ஹமீர்பூர் நகரங்களில் விலைகள் உயர்த்தப்படவில்லை. குருகிராமில் ஒரு கிலோ எரிவாயு 87.89 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நொய்டா, காசியாபாத் பகுதிகளில், 81.17 ஆக இருந்த சிஎன்ஜி விலை 82.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, ரேவாரி, மீரட், அஜ்மீர், முசபார் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் சிஎன்ஜி விலைகள் மாற்றப்பட்டுள்ளன.