இண்டஸ்இண்ட் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 50% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாத நிறைவில், இண்டஸ்இண்ட் வங்கியின் நிகர லாபம் 2040 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. வங்கியின் காலாண்டு நிதிநிலை அறிக்கையின் படி, 2023 ஆம் நிதி ஆண்டுக்கு, வங்கியின் பங்கு ஒன்றுக்கு 14 ரூபாய் டிவிடெண்ட் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், வங்கியின் வட்டி வருவாய் 4669 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 17% உயர்வாகும். அதே வேளையில், வங்கியின் கடன் மதிப்பு 29% சரிந்து, 1030 கோடி ரூபாயாக உள்ளது. மேலும், வங்கியின் என்பிஏ விகிதம் 1.98% ஆக சரிவடைந்துள்ளது. மார்ச் மாத நிறைவில், இண்டஸ்இண்ட் வங்கியின் மொத்த வருவாய் 16% உயர்ந்து, 6823 கோடியாக உள்ளது. குறிப்பாக, வட்டி வருவாய் 13% உயர்ந்து, 2514 கோடியாகவும், லாபம் 11% உயர்ந்து 3758 கோடி ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.