இந்துஜா குழும தலைவர் எஸ்பி இந்துஜா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்

May 18, 2023

இந்துஜா குழும தலைவரும், இந்துஜா குடும்பத்தின் மூத்தவருமான ஸ்ரீசந்த் பரம்சந்த் இந்துஜா உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 87. கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், லண்டனில் அவரது உயிர் பிரிந்தது. முன்னதாக இந்துஜா குழும தலைவர் மற்றும் அவரது சகோதரர்கள் கோபிசந்த் மற்றும் பிரகாஷ், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளரான ஏபி போஃபோர்ஸ்-க்கு இந்திய அரசின் ஒப்பந்தத்தை வாங்கி கொடுக்க இந்திய மதிப்பில் ரூ. 63 கோடியே 87 […]

இந்துஜா குழும தலைவரும், இந்துஜா குடும்பத்தின் மூத்தவருமான ஸ்ரீசந்த் பரம்சந்த் இந்துஜா உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 87.

கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், லண்டனில் அவரது உயிர் பிரிந்தது. முன்னதாக இந்துஜா குழும தலைவர் மற்றும் அவரது சகோதரர்கள் கோபிசந்த் மற்றும் பிரகாஷ், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளரான ஏபி போஃபோர்ஸ்-க்கு இந்திய அரசின் ஒப்பந்தத்தை வாங்கி கொடுக்க இந்திய மதிப்பில் ரூ. 63 கோடியே 87 லட்சத்து 48 ஆயிரத்து 048 வரை சட்டவிரோதமாக பணம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பின் இவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu