குடியரசு தினத்தை முன்னிட்டு, இண்டஸ் பேட்டில் ராயல் எனும் புதிய ஆக்சன் கேம் இந்தியாவில் முன்பதிவுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கேம், பப்ஜி கேமுக்கு மாற்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. புனேவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சூப்பர் கேமிங் என்ற நிறுவனம் இந்த கேமை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, பப்ஜி விளையாட்டு இந்தியாவில் முடக்கப்பட்டது. அதன் பின்னர், அதைப் போலவே இருக்கும் பாட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா கேம் அறிமுகமானது. தென்கொரிய நிறுவனம் வடிவமைத்த இந்த விளையாட்டு, தற்போது இந்தியர்களால் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே, தற்போது, இந்திய நிறுவனம் சார்பில், பப்ஜி போன்ற கேமிங் அனுபவத்தை தரும் இண்டஸ் பேட்டில் ராயல் கேம் உருவாக்கப்பட்டு முன்பதிவுக்கு வெளிவந்துள்ளது. நிலவும் சந்தை சூழலை சாதகாமாக்கி இந்த கேமை இலவசமாக பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. பப்ஜி, பிரீ பையர் போன்ற விளையாட்டுகளை போலவே இதிலும் வன்முறை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.














