இண்டஸ்இண்ட் வங்கி தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருடாந்திர அடிப்படையில் 69% லாப உயர்வை வங்கி பதிவு செய்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 1959 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வட்டிகள் மூலம் கிடைக்கும் நிகர வருவாய் வருடாந்திர அடிப்படையில் 19% உயர்ந்து, 4495 கோடியாக பதிவாகியுள்ளது.
கடந்த காலாண்டில், வங்கியின் செலவுகள் 22% அதிகரித்து, 2885 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இதர வருவாய் 28% உயர்ந்து 1941 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், வங்கியில் உள்ள வைப்புத் தொகை 14% உயர்ந்து 3.25 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் வருடாந்திர அடிப்படையில் 14% உயர்வை பதிவு செய்துள்ளன. மேலும், வங்கியின் நேரடி பண பரிமாற்ற விகிதம் 117% உயர்ந்துள்ளது. வங்கியின் கிளைகள் மற்றும் ஏடிஎம் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.