2023 ல் இந்தியாவின் பணவீக்கம் 5% ஆக குறையும் - சர்வதேச நாணய நிதியம்

January 31, 2023

வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பணவீக்கம் 6.8% ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5% ஆகவும், 2024 மார்ச் மாதத்தில் 4% ஆகவும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி துறை தலைவர் டேனியல் லேக் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 84% உலக நாடுகள், 2023 ஆம் ஆண்டில், 2022 ஆம் ஆண்டை விட குறைவான நுகர்வோர் விலை குறையீட்டு […]

வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பணவீக்கம் 6.8% ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5% ஆகவும், 2024 மார்ச் மாதத்தில் 4% ஆகவும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி துறை தலைவர் டேனியல் லேக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 84% உலக நாடுகள், 2023 ஆம் ஆண்டில், 2022 ஆம் ஆண்டை விட குறைவான நுகர்வோர் விலை குறையீட்டு எண்ணை பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச பணவீக்கம், 2023ல், தற்போதைய 8.8% இருந்து 6.6% ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டு, பெருந்தொற்றுக்கு முந்தைய பதிவாக 4.3% அளவை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளின் பணவீக்க விகிதம் 7.3% இருந்து 4.6% ஆகவும், 2.6% ஆகவும் 2023, 2024ம் ஆண்டுகளில் சரியும் என கணிக்கப்பட்டுள்ளது, இதுவே, வளரும் நாடுகளை பொறுத்தவரை, 9.9% இருந்து 8.1% ஆகவும், 5.5% ஆகவும் சரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழ்மை நாடுகளில், பணவீக்க விகிதம், 14.2% இருந்து 8.6% ஆக 2024-ம் ஆண்டு சரியும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu