சென்னையில் வேகமாக இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
சென்னையில் செப்டம்பர் முதல் ஜனவரி வரை மழைக்கால நோய்கள் பரவி வரும். அதில் இந்த வருடமும் பெருமளவு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்துகொண்டு வருவதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இன்புளுயன்சா - ஏ வகை காய்ச்சல் அதிகமான அளவில் இருப்பதில் கண்டறியப்பட்டு உள்ளது.
எனவே சுகாதார துறையினர் மக்கள் காய்ச்சல் பாதித்தவர்கள் தங்களை தனிமை படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்கள் காய்ச்சல் குறையவில்லை எனில் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.














