உலகின் சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நிறுவனம் - இன்போசிஸ்

September 15, 2023

2023 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலை 'டைம்ஸ்' வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனமாக இன்போசிஸ் சாதனை படைத்துள்ளது. டைம்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இன்போசிஸ் நிறுவனம் 64வது இடம் பிடித்துள்ளது. மேலும், நிறுவனத்திற்கான மதிப்பீடு 88.38 ஆக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மிகச்சிறந்த வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளதாக இன்போசிஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இன்போசிஸ் பகிர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 750 சர்வதேச நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பல்வேறு […]

2023 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலை 'டைம்ஸ்' வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனமாக இன்போசிஸ் சாதனை படைத்துள்ளது.
டைம்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இன்போசிஸ் நிறுவனம் 64வது இடம் பிடித்துள்ளது. மேலும், நிறுவனத்திற்கான மதிப்பீடு 88.38 ஆக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மிகச்சிறந்த வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளதாக இன்போசிஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இன்போசிஸ் பகிர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 750 சர்வதேச நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஆல்பபெட், மெட்டா, அக்சென்சர் ஆகிய நிறுவனங்கள் முதல் 5 இடங்களில் முறையே இடம்பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu