இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வரிக்குப் பின்னான லாபம் 11% உயர்வை பதிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 5945 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய் 10% உயர்வை பதிவு செய்து, 37933 கோடியாக கூறப்பட்டுள்ளது. இதுவே, காலாண்டு அடிப்படையில், லாபம் 3% சரிவையும், வருவாய் 1% உயர்வையும் பதிவு செய்துள்ளன. மேலும், சர்வதேச அரங்கில் நிலவி வரும் பொருளாதார நிலைத்தன்மை இல்லா சூழலை கருத்தில் கொண்டு, 2024 ஆம் நிதி ஆண்டுக்கான வருவாய் வளர்ச்சி கணிப்பை இன்போசிஸ் குறைத்து அறிவித்துள்ளது. இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை படி, நடப்பு நிதி ஆண்டுக்கான வருவாய் வளர்ச்சி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 - 7% இல் இருந்து 1 - 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.