இன்ஃபோசிஸ் நிறுவனம், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 20.2% உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில், நிறுவனத்தின் வருவாய் 38318 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 13.4% உயர்ந்து, 6586 கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி விகிதம் 15 முதல் 16% ஆக கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 16 முதல் 16.5% ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், வருடாந்திர அடிப்படையில் 13.7% மற்றும் மாதாந்திர அடிப்படையில் 2.4% வருவாய் வளர்ச்சி பதிவாகி உள்ளது. மேலும், இந்த காலாண்டில், பல முக்கிய ஒப்பந்தங்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் வென்றுள்ளது. மேலும், நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 24.3% ஆக குறைந்துள்ளது.