இன்போசிஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 7975 கோடி ரூபாயாகவும், மொத்த வருவாய் 37923 கோடி ரூபாயாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை ஒட்டி, இந்திய பங்குச் சந்தையில் இன்போசிஸ் பங்குகள் இன்று உயர்ந்து வர்த்தகமாகின.
இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025 ஆம் நிதி ஆண்டுக்கான வருவாய் கணிப்பு 1 முதல் 3% ஆகும். இது ஏற்கனவே கணிக்கப்பட்ட 4 முதல் 7% அளவை விட குறைவு என்பது கவனிக்கத்தக்கது. மேலும், கடந்த காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் எபிட்டா மார்ஜின் பெரிய மாற்றங்கள் இன்றி அதே நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.