கடந்த வாரம் இன்போசிஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகின. அதை தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகள் ஏறுமுகமாக இருந்து வந்தன. இந்த நிலையில், இன்று, இன்போசிஸ் பங்கு மதிப்பு ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், தேசிய பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 1665.5 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இன்போசிஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், நிறுவனத்துக்கு முக்கிய முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பங்கு மதிப்பு உயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வருவது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, இன்போசிஸ் பங்கு மதிப்பு 1800 ரூபாய் வரை உயரும் என கணித்துள்ளனர்.