இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்த முடிவுகள் வெளியானதை அடுத்து, இந்திய பங்குச் சந்தையில் இன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 9% சரிவை பதிவு செய்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு 1311.6 ரூபாய்க்கு வர்த்தகமானது. மேலும், இன்று ஒரே நாளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பங்குச் சந்தை மிகவும் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் நெட்பிளிக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்த நிலையில், இந்தியாவில் இன்போசிஸ் மிக முக்கிய சரிவை பதிவு செய்துள்ளது. டிசிஎஸ், ஹெச் சி எல் டெக், விப்ரோ போன்ற இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் சரிவடைந்துள்ளன.
வரும் 2024 ஆம் நிதி ஆண்டுக்கான வருவாய் வளர்ச்சி கணிப்பை இன்போசிஸ் குறைத்து அறிவித்துள்ளதால், இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது குறித்து பொருளாதார நிபுணர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.