கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு, தனது ஊழியர்களுக்கு, சராசரியாக 60% வேரியபிள் பே வழங்குவதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய முறையில், நிலைத்தன்மை இல்லாத பொருளாதார சூழ்நிலை நிலவி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2023 ஆம் நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் 70%, இரண்டாம் காலாண்டில் 65% வேரியபிள் பே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கு மே மாத சம்பளத்துடன் இந்த வேரியபிள் பே வழங்கப்படும் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச பொருளாதார மந்த நிலையின் எதிரொலியாக, 2024ஆம் தேதி ஆண்டுக்கு, 4 முதல் 7% வரை மட்டுமே வருவாய் வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.