அக்சன்சர் வருவாய் குறைத்து அறிவிப்பு - ஐடி நிறுவன பங்குகள் சரிவு

March 22, 2024

2024 ஆம் நிதி ஆண்டுக்கான வருவாய் வளர்ச்சி வழிகாட்டுதல்களை அக்சன்சர் நிறுவனம் குறைத்து அறிவித்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் பிற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏடிஆர் மதிப்பு சரிந்துள்ளது. அக்சன்சர் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளர்ச்சியானது 2% முதல் 5% அளவில் இருக்கலாம் என முன்னர் கணிக்கப்பட்டது. தற்போது, இதனை 1% முதல் 3% ஆக குறைத்து நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் சரிய தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் […]

2024 ஆம் நிதி ஆண்டுக்கான வருவாய் வளர்ச்சி வழிகாட்டுதல்களை அக்சன்சர் நிறுவனம் குறைத்து அறிவித்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் பிற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏடிஆர் மதிப்பு சரிந்துள்ளது.

அக்சன்சர் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளர்ச்சியானது 2% முதல் 5% அளவில் இருக்கலாம் என முன்னர் கணிக்கப்பட்டது. தற்போது, இதனை 1% முதல் 3% ஆக குறைத்து நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் சரிய தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தையில், விப்ரோ நிறுவனத்தின் ஏடிஆர் 2% அளவுக்கு கீழ் சரிந்து, 5.86 டாலர்களுக்கு வர்த்தகமானது. அதே சமயத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் ஏடிஆர் 3.9% வீழ்ச்சி அடைந்து 18.34 டாலர்களுக்கு வர்த்தகமானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu