நாசாவின் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தில் அதிக உயரம் பறந்து சாதனை

December 7, 2022

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட நாசாவின் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் அதிக உயரம் பறந்து புதிய சாதனை படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர் உடன், இந்த சிறிய ரக, சூரிய சக்தியால் இயங்கும் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. இது கடந்த டிசம்பர் 3ம் தேதி, 14 மீட்டர் உயரத்திற்கு பறந்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, மூன்று முறை, 12 மீட்டர் உயரம் வரை இந்த ஹெலிகாப்டர் பறந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், வேற்று கிரகத்தில் பறக்க விடப்பட்ட முதல் ஹெலிகாப்டராக […]

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட நாசாவின் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் அதிக உயரம் பறந்து புதிய சாதனை படைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர் உடன், இந்த சிறிய ரக, சூரிய சக்தியால் இயங்கும் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. இது கடந்த டிசம்பர் 3ம் தேதி, 14 மீட்டர் உயரத்திற்கு பறந்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, மூன்று முறை, 12 மீட்டர் உயரம் வரை இந்த ஹெலிகாப்டர் பறந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன், வேற்று கிரகத்தில் பறக்க விடப்பட்ட முதல் ஹெலிகாப்டராக இது உள்ளது.

இன்ஜெனூட்டி ஹெலிகாப்டரில் முக்கிய மென்பொருள் மேம்படுத்துதல் நடத்தப்பட்டது. தரையிறங்கும் போது உள்ள தடைகளை கையாளவும், டிஜிட்டல் எலிவேஷன் மேப் பயன்படுத்தி பயணிக்கவும் இந்த மென்பொருள் மேம்படுத்துதல் செய்யப்பட்டது. அதன் பின்னர், நவம்பர் 22 ஆம் தேதி இந்த ஹெலிகாப்டர் பறக்க விடப்பட்டது. இரண்டாம் முறையாக, டிசம்பர் 3ம் தேதி பறக்க விடப்பட்டதில், 14 மீட்டர் உயரம் மற்றும் சுமார் ஐந்து மீட்டர் தூரம் இந்த ஹெலிகாப்டர் காற்றில் பறந்து சாதனை புரிந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu