இந்த ஆண்டின் இறுதிக்குள் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் பொதுமக்கள் வசதிக்காக புதிய பேருந்து முனையம் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு பொதுமக்கள் வசதிக்காக ரயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. தற்போது இதன் முதல் கட்டமாக கிளாம்பக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ரயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டில் முடிவிற்குள் இதனை நிறைவு செய்ய ரயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்தடுத்து ஆகும் செலவுகளை கணக்கில் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் இந்த வார இறுதியில் ரயில்வே வாரியம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.