எச்ஐவி தடுப்பூசியை வருடத்திற்கு 2 முறை செலுத்திக் கொள்வதால் நோய் பாதிப்பில் இருந்து 100% பாதுகாப்பு கிடைப்பதாக தென்னாப்பிரிக்கா மற்றும் உகாண்டா பகுதிகளில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வருடத்திற்கு 2முறை எச்ஐவி நோய் பாதிப்பை தீர்ப்பதற்கான Lenacapavir (Len LA) ஊசியை செலுத்திக் கொள்ளும் முறை, மற்ற மருந்துகளை விடவும், தினசரி உட்கொள்ளும் மாத்திரைகளை விடவும் அதிக பலனளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 16 முதல் 25 வயதுடையவர்களுக்கு இந்த ஊசி பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஆய்வு முடிவுகள் சாதகமாக வெளிவந்துள்ளன. எனினும், எச்ஐவியை குணப்படுத்துவதற்கு இது முழுமையான தீர்வாகாது எனவும், பாதுகாப்பான உடலுறவு கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.