ஐநாக்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு பொது பங்கிட்டுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
ஐநாக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ தேதிகள் மற்றும் பங்கு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 14 முதல் 18 ஆம் தேதி வரையில் ஐநாக்ஸ் ஐபிஓ நடைபெற உள்ளது. அப்போது, நிறுவனத்தின் ஒரு பங்கு 672 ரூபாய் முதல் 660 ரூபாய் வரை விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு லாட்டுக்கு 22 பொது பங்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஐ பி ஓ வில், குறைந்தபட்சமாக 13794 ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டும். ஐ பி ஓ நிறைவடைந்த பிறகு, டிசம்பர் 21ஆம் தேதி, ஐநாக்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.