சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் கட்டுமானப் பணிகள் ஆய்வு

January 23, 2023

சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கட்டுமானப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி சென்னை கிண்டி கிங் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், இந்த மருத்துவமனையில் […]

சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கட்டுமானப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி சென்னை கிண்டி கிங் நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமைக் கட்டிட கட்டமைப்பாக இதை உருவாக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu