பொதுவாக பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பயனர்கள் பதிவிறக்கம் செய்ய முடியும். மெட்டா நிறுவனத்தின் புகைப்படம், வீடியோ மற்றும் சமூக இணைப்பு பிரிவு தலைவர் ஆதாம் மோசரி, இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்படுவதாகவும், விரைவில் பிற உலக நாடுகளிலும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் டவுன்லோட் என்ற பொத்தான் புதிதாக இடம்பெறும். மேலும், இது பொதுவான கணக்குகளின் ரீல்ஸ்களில் மட்டுமே இடம்பெறும். அத்துடன், பதிவிறக்கம் செய்யும் அம்சத்தை, குறிப்பிட்ட அந்த ரிலீஸ் வீடியோ கொண்டிருக்க வேண்டுமா இல்லையா என்பதை, கணக்குதாரர் முடிவு செய்ய முடியும். பதிவிறக்கம் செய்யப்படும் ரில்ஸ்களில் இன்ஸ்டாகிராம் லோகோ இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.