இன்ஸ்டாகிராமில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து கூறிய இந்திய மாணவனுக்கு, இன்ஸ்டாகிராம் 38 லட்ச ரூபாய் ஊக்கப் பரிசு வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தலைப்பு கொடுக்கும் இடத்தில் குறைபாடுகள் இருந்ததை கண்டறிந்ததன் மூலம் கோடிக்கணக்கான பயனர்களின் தரவுகள் கசிவதை இந்த மாணவர் தவிர்த்து உள்ளார். எனவே, இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நீரஜ் ஷர்மா, இன்ஸ்டாகிராம் ரிலீஸ் வீடியோக்களில் தலைப்புகளை மாற்றும்போது பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டுபிடித்தார். அதனை இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார். மூன்று நாட்களுக்குப் பின்னர், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து அதிகாரிகள் மாணவனை தொடர்பு கொண்டு, குறைபாடு குறித்த ஆதார வீடியோவை அனுப்புமாறு கூறியுள்ளனர். அதன் பெயரில், குறைபாடு தொடர்பான ஐந்து நிமிட வீடியோ ஒன்றை மாணவர் அனுப்பியுள்ளார். அவர் கூறியதில் உள்ள உண்மையை நிறுவனத்தின் மென்பொறியாளர்கள் உறுதி செய்தனர். அதனால், அந்த மாணவனைப் பாராட்டும் வகையில், ஃபேஸ்புக் நிறுவனம் 35 லட்ச ரூபாயை ஊக்கப் பரிசாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்வு இந்திய அளவில் பேசு பொருளாகி உள்ளது.