இன்ஸ்டாகிராம் செயலியில், சரிபார்க்கப்பட்ட பயனர்களின் பதிவுகள் மட்டுமே காட்டப்படும் வகையில், புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பரிசோதனையில் மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதனை, இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆதாம் மோசரி தெரிவித்துள்ளார்.
“இன்ஸ்டாகிராம் செயலியில், பயனர்கள் எந்தெந்த பதிவுகளை காண வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருக்கும் வகையில், புதிய அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, மெட்டா வெரிஃபைடு பயனர்களின் பதிவுகள் மட்டுமே காட்டப்படும்” - இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் தளத்தில், இதே போன்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, சரிபார்க்கப்பட்ட பயனர்களின் பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். அந்த வகையில், மெட்டா நிறுவனமும், சந்தாதாரர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.