7 வயதை கடந்த குழந்தைகளின் ஆதாரில் கைரேகை மற்றும் கண்படிவங்களை புதுப்பிக்காவிட்டால், அந்த ஆதார் செயலில் இருந்து நீக்கப்படும் என அதிகாரப்பூர்வ எச்சரிக்கை. இதற்கான விழிப்புணர்வாக பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது ஆதார் ஆணையம்.
5 வயதுக்கு குறைவாக ஆதார் பெற்ற குழந்தைகள், 7 வயதை கடந்தவுடன் கைரேகை மற்றும் கண்படிவங்களை புதுப்பிப்பது அவசியம் என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை தவிர்த்தால், அந்த ஆதார் செயல் இழக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெற்றோர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பயோமெட்ரிக் புதுப்பிப்பு முற்றிலும் இலவசமாகும். ஆதார் செல்லுபடியாக இருக்க, இந்த விவரங்களை நேரடியாக அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் புதுப்பிக்க பெற்றோர் முன்வர வேண்டும்.














