தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறந்து விடுவதற்கு வாய்ப்பு இல்லை என கர்நாடக முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
காவிரியில் இந்த ஆண்டு நீர் வரத்து குறைந்துள்ளதால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. கேரளா, குடகு மாவட்டங்களிலும் இந்த ஆண்டு மிக குறைந்த அளவே மழை பெய்துள்ளது. இதனால் காவேரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை என கர்நாடகா முதல் மந்திரி கூறியுள்ளார்.