கறவை மாடுகளுக்கு காப்பீட்டு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் கூறுகையில், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கறவை மாடுகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்தித்தர வேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றார். மேலும் விவசாயிகளுக்கு மிக மிக குறைந்த விலையில் கால்நடைகளுக்கான தீவனம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனுமதியுமின்றி சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்கு பால் வழங்குவது குறித்த புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.














