அமெரிக்காவைச் சேர்ந்த செமி கண்டக்டர் நிறுவனமான இன்டெல், வரலாற்று பின்னடைவை சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று, சுமார் 10 பில்லியன் டாலர்கள் மதிப்பில் சந்தை மதிப்பை இந்த நிறுவனம் இழந்துள்ளது.
எதிர்பாராத விதமாக, முதலாம் காலாண்டில் இன்டெல் நிறுவனத்தின் வருவாய் கணிப்பு 3 பில்லியன் டாலர்கள் வரை குறைவாக உள்ளது. மேலும், நிறுவனத்தின் டேட்டா சென்டர் வணிகமும் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையவில்லை. எனவே, இன்டெல் நிறுவனத்தின் பங்குகள் 7% க்கும் கீழாக குறைந்துள்ளன. நிறுவனத்தின் முக்கிய விநியோகஸ்தரான கே எல் ஏ கார்ப் பங்குகள் 5% குறைவாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், தனது துறையில் மிகச் சிறப்பாக கோலோச்சி வந்த இன்டெல் நிறுவனத்தின் சரிவு, புதிய நிறுவனங்களின் வரவு காரணமாக நேர்ந்திருக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.