வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி உட்பட மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டார வட்டாரத்திற்கும் துணைக் கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு 9 வட்டாரத்திற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைப்பதற்காக மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரண ஆற்றில் ஆழமான பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தேவையான இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மலை கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் அந்தஸ்துக்கான அதிபர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேரிடர் கால சிறப்பு பயிற்சிகள் கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














