இண்டிகோ நிகர லாபம் 111% உயர்வு

February 2, 2024

இண்டிகோ விமான நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 111% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இண்டிகோ விமான நிறுவனத்தின் நிகர லாபம் 111% உயர்ந்து, 2998 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 30% உயர்ந்து 19452 கோடியாக பதிவாகியுள்ளது. அதில், விமான பயண சீட்டு விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 30% உயர்ந்து 17157 […]

இண்டிகோ விமான நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 111% உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இண்டிகோ விமான நிறுவனத்தின் நிகர லாபம் 111% உயர்ந்து, 2998 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 30% உயர்ந்து 19452 கோடியாக பதிவாகியுள்ளது. அதில், விமான பயண சீட்டு விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 30% உயர்ந்து 17157 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 61% உயர்ந்து 5475 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தொடர்ந்து 5வது காலண்டாக லாபம் பதிவாகி வருகிறது. அத்துடன், கடந்த காலாண்டில், இண்டிகோ விமான நிறுவனத்தில் பயணித்த மொத்த பயணியரின் எண்ணிக்கையில் 24% உயர்வு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu