டெல்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் 

டெல்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க தடை விதிக்கக்கூடாது என்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், அரசின் உரிமம் இல்லாமல் சாலையில் வாகனங்கள் இயங்க […]

டெல்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க தடை விதிக்கக்கூடாது என்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், அரசின் உரிமம் இல்லாமல் சாலையில் வாகனங்கள் இயங்க முடியாது. மேலும் டெல்லியில் ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க இடைக்கால தடை விதித்தது. இவற்றை இயங்க அனுமதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu