இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தடையில்லா சான்று பெற்று இரண்டாவது சேப்பாக்கம் மைதானம் திட்டம் விரிவாக்கம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் போல கோவையிலும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுவதாக 2024 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன் அடிப்படையில், கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலையின் இயங்கும் இடத்தில், 20.72 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு பணிகள் முழுமையாக முன்னேறி வருகின்றன.இந்த நிலையில், கோவை ஒண்டிப்புதூரில் இந்த மைதானம் அமைக்கும் செயலில் இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.














