ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கு வரும் 21ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். இந்நிலையில் வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். இதையடுத்து வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகின்றனர்.
மேலும் அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் அமெரிக்கா, இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.