அரியானாவில் விவசாயிகள் பேரணி: 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கம்

December 14, 2024

அரியானா, பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருவதால் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2020-ம் ஆண்டு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினார்கள். பின்னர், 2021-ல் அந்த சட்டங்களை திரும்பப் பெற்றாலும், குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை வலியுறுத்தி, விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி, டெல்லியில் முகாமிட்டு போராட முடிவு செய்துள்ளனர். இன்று, […]

அரியானா, பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருவதால் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 2020-ம் ஆண்டு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினார்கள். பின்னர், 2021-ல் அந்த சட்டங்களை திரும்பப் பெற்றாலும், குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை வலியுறுத்தி, விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி, டெல்லியில் முகாமிட்டு போராட முடிவு செய்துள்ளனர்.

இன்று, அரியானா மாநிலம் ஷம்பு எல்லையிலிருந்து 101 விவசாயிகள் தங்கள் போராட்ட பேரணியை டெல்லி நோக்கி தொடங்கினர். இது 3-வது முயற்சியாகும். இதனை எதிர்கொண்டு, அரியானா, பஞ்சாப் எல்லைகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதோடு, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இன்று காலை 6 மணி முதல் 17-ம் தேதி வரை இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu