புதிய கொடி அறிமுகம் - இந்திய விமானப்படை

October 9, 2023

இந்திய விமானப்படைக்கு நேற்று புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் இதன் பங்களிப்பை பாராட்டி 1945 ஆம் ஆண்டு 'ராயல் இந்திய விமானப்படை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கென ஒரு தனி கொடி உருவாக்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. அதன் கொடியும் பின்னர் மாற்றம் […]

இந்திய விமானப்படைக்கு நேற்று புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் இதன் பங்களிப்பை பாராட்டி 1945 ஆம் ஆண்டு 'ராயல் இந்திய விமானப்படை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கென ஒரு தனி கொடி உருவாக்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. அதன் கொடியும் பின்னர் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது இந்தியா கடல் படையின் கொடி மாற்றப்பட்டது. அதேபோல் நேற்று விமான படைக்கும் புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கொடி நீல நிறத்தில் அமைந்துள்ளது. இதன் இடது புறம் தேசியக்கொடியும்,வலதுபுற மேல் பக்கத்தில் நான்கு சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னத்துடன் விமானப்படை சின்னமும் அமைந்துள்ளது. அதில் சத்ய மேவ ஜெயதே என்ற வாசகங்கள் இடம் பெற்று இருக்கின்றன. அதேபோல் கீழே இமயமலை கழுகு சிறகு விரித்து பறப்பது போன்ற படம் நீல நிற வளையத்திற்குள் அமைந்துள்ளது. அதில் 'பாரதீய வாயு சேனா' என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருக்கின்றன. நாம் விரும்பிய உயரத்திற்கு விமானப் பணியை கொண்டு செல்ல அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu