இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மஹிந்திரா, புதிய வகை பொலிரோ மேக்ஸ் பிக் அப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு நவீன அம்சங்கள் மற்றும் தரம் கூட்டப்பட்ட உதிரி பாகங்கள் ஆகியவற்றைக் கொண்ட இந்த வாகனத்தின் ஆரம்ப விலை 7.85 லட்சம் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், 24999 ரூபாய் முன்பணம் செலுத்தி, இந்த வாகனத்தை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் வாகனப் பிரிவு தலைவர் விஜே நாகரா, “மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், நல்ல தயாரிப்புகளை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதில் பெருமிதம் கொள்கிறோம். புதிய பொலிரோ வாகனத்தில், அதிநவீன அம்சங்கள், ஒப்பிட முடியாத ஆற்றல், அதிகபட்ச சுமந்து செல்லும் திறன் மற்றும் அதிக மைலேஜ் ஆகியவை உள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு பயணமும் பயனளிப்பதாக இருக்கும். மேலும், ஓட்டுனர்களுக்கு சோர்வு இல்லாத பயண அனுபவம் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.