ரயிலில் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதி அறிமுகம்

February 7, 2023

ரயில் பயணிகள் வாட்ஸ்- அப் செயலியின் மூலமாக உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே விரைவில் அனைத்து வழித்தடத்திலும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில் இ - கேட்டரிங் பிரிவில் வாட்ஸ் -அப் சேவையை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்காக +91-8750001323 என்ற வாட்ஸ்-அப் எண் அனுப்பிவைக்கப்படும். அதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள […]

ரயில் பயணிகள் வாட்ஸ்- அப் செயலியின் மூலமாக உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே விரைவில் அனைத்து வழித்தடத்திலும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில் இ - கேட்டரிங் பிரிவில் வாட்ஸ் -அப் சேவையை அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்காக +91-8750001323 என்ற வாட்ஸ்-அப் எண் அனுப்பிவைக்கப்படும். அதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களின் உணவகங்களைத் தேர்வு செய்து தேவையான உணவை முன்பதிவு செய்தால், உணவு இருக்கைக்கே வந்துவிடும். வாட்ஸ்-அப் மூலம் உணவை பெறும் வசதி குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu