உலகில் முதல் ஹைபர் லோக்கல் சமூக ஊடகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மின்மினி என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு மின்மினி என்ற சமூக ஊடக செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணங்கள் ஒருவருக்கொருவர் அரட்டை அடிக்கலாம், தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம்,மேலும் தடை இன்றி தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இந்த குழுவினால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி சேனல் நெட்வொர்க்களைக் கொண்ட கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக இது விளங்கும். இதில் அங்கீகாரம் என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை கன்டன்டின் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகிவற்றின் அடிப்படையில் அங்கீகாரம் ஆனது வழங்கப்பட உள்ளது. இதனை ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.














