இந்தியாவில் ஏர் டாக்ஸி சேவை அறிமுகம்

April 22, 2024

இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தியாவில் வான்வெளி டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் இண்டிகோ. இதனை இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனமானது இந்தியாவில் வான்வெளி டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி டெல்லியின் கனௌட் பிளேஸில் இருந்து ஹரியானாவின் குருகிராமிற்கு முதற்கட்டமாக இந்த ஏர் டாக்ஸி சேவை இயக்கப்பட உள்ளது. இந்த சேவை 2026 ஆம் ஆண்டு பிறகு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும் இது டெல்லியில் […]

இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தியாவில் வான்வெளி டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் இண்டிகோ. இதனை இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனமானது இந்தியாவில் வான்வெளி டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி டெல்லியின் கனௌட் பிளேஸில் இருந்து ஹரியானாவின் குருகிராமிற்கு முதற்கட்டமாக இந்த ஏர் டாக்ஸி சேவை இயக்கப்பட உள்ளது. இந்த சேவை 2026 ஆம் ஆண்டு பிறகு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும் இது டெல்லியில் இருந்து ஹரியானாவிற்கு பயணிகளை ஏழு நிமிடங்களில் அழைத்து சென்றுவிடும். இதற்காக பயணிகளின் கட்டணமாக ரூபாய் இரண்டாயிரத்தில் தொடங்கி 3 ஆயிரம் வரை வசூலிக்கப்பட உள்ளது. இந்த சேவை வழங்குவதற்காக இன்டர்குளோப் நிறுவனம் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 200 மிட்நைட் ட்ரோன் விமானங்களை வாங்க உள்ளது. மேலும் மும்பை மற்றும் பெங்களூரில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu