இந்தியாவில் மேலும் 9 நகரங்களில் 'டிஜிட்டல் கரன்சி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ரபி சங்கர் கூறுகையில், டிஜிட்டல் கரன்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ரிசர்வ் வங்கி அவசரம் காட்டவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் துவக்கத்தில் 8 வங்கிகளுடன் இணைந்து 5 நகரங்களில் குறிப்பிட்ட சில்லரை வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்தது. தற்போது இந்த சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கையை 9ஆக அதிகரிப்பதோடு, கூடுதலாக 5 வங்கிகளும் சேர்க்கப்பட உள்ளது. டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகள் மெதுவாக அதிகரித்து வருகின்றன. இதுவரை மொத்தம் 7.7 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனைகள் நடைபெற்று உள்ளன என்று அவர் கூறினார்.














