இணைய வழி விசாரணைகளுக்காக இ-கோர்ட் திட்டம் அறிமுகம்

March 17, 2023

இணைய வழி விசாரணைகளுக்காக இ-கோர்ட் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களை கணினிமயமாக்கி தொழில்நுட்பத்தின் மூலம் நீதி பெறும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த மின் நீதிமன்றங்கள் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் கட்டத் திட்டம் 2011 - 2015 காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டத்திட்டம் 2015-ம் […]

இணைய வழி விசாரணைகளுக்காக இ-கோர்ட் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களை கணினிமயமாக்கி தொழில்நுட்பத்தின் மூலம் நீதி பெறும் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த மின் நீதிமன்றங்கள் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் கட்டத் திட்டம் 2011 - 2015 காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டத்திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 18,735 மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைய உள்ள நிலையில், இத்திட்டத்தின் 3-வது கட்டம் புதிய நவீன அம்சங்களை கொண்டுள்ளதாக அமையும். டிஜிட்டல் முறையிலான காகிதப் பயன்பாடற்ற நீதிமன்றங்கள் என்ற இலக்கை நோக்கியதாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu